Close Menu
    What's Hot

    அழியாத முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா..!! துணை குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் 2027-ல் ஏவப்படும்… இஸ்ரோ ஹேப்பி நியூஸ்
    இந்தியா

    குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் 2027-ல் ஏவப்படும்… இஸ்ரோ ஹேப்பி நியூஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    isro
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும். ககன்யான் விண்கலத்தை 2027-ல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இஸ்ரோ தலைவர் நாரயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

    ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி, அவர்களைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் தயாரிப்புப் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது. விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வெப்பநிலை, அழுத்தம், கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டுப் பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் பணியும் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இத்திட்டத்துக்காகக் கிட்டத்தட்ட 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

    மனிதர்களை ஏற்றிய ககன்யான் விண்கலத்தை 2027-ல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஆட்கள் இல்லாத மூன்று பரிசோதனை ராக்கெட்டுகள் அனுப்பப்பட உள்ளன.

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் ஐந்து தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி 2028-ல் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

    2023-ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் நன்றாக நடைபெற்று வருகின்றன. இது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்தத் திட்டம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பேசுவதற்குப் பதிலாக, இந்திய நாட்டுக்கான ஒரு முக்கியமான மையமாக பார்க்கப்பட வேண்டும்.

    2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்துத் திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகை நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து?
    Next Article SIR பணிக்கான கால அவகாசம் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு
    Editor TN Talks

    Related Posts

    அழியாத முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா..!! துணை குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

    June 10, 2026

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    June 10, 2026

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அழியாத முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா..!! துணை குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.