Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»SIR பணிக்கான கால அவகாசம் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு
    தமிழ்நாடு

    SIR பணிக்கான கால அவகாசம் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sir
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கான கால அவசாகம் மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. ஒருமாத காலம் நடைபெறும் இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி நிறைவடையும் என்ற தேர்தல் ஆணையம் அப்போது அறிவித்திருந்தது. ஒரு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முக்கியமான இந்தப் பணியை 30 நாள்களில் மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.

    இந்த நிலையில், SIR பணிக்கான கால அவகாசம் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக, அதாவது டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இப்பணியை மேற்கொள்வதற்கான கால அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டை போன்றே குஜராத் மாநிலத்திலும் இப்பணிக்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளிலும் SIR பணிகளுக்கான காலஅவகாசம் டிசம்பர் 18-ம் தேதி வரையிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்பணி்க்கான அவகாசம் வரும் 26 -ம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் (டிச.9) விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், SIR தொடர்பாக முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர்

    அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளுக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் 2027-ல் ஏவப்படும்… இஸ்ரோ ஹேப்பி நியூஸ்
    Next Article இரவில் தலைக்கு எண்ணெய் வைத்து படுத்தால் முடி வளருமா? ஆய்வு சொல்வது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    July 29, 2026

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    July 29, 2026

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.