300 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மைசூர் மகாராஜா திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு பெரிய வெள்ளி தீபங்களை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தார்.
அகண்ட தீபம் என்று கூறப்படும் அத்தகைய தீபங்களை ஏழுமலையான் கருவறையில் நிலை நிறுத்தி ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போதைய மைசூர் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவி திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று தலா 50 கிலோ எடையுள்ள வெள்ளியால் தயார் செய்யப்பட்ட இரண்டு அகண்ட தீபங்களை இன்று காணிக்கையாக சமர்ப்பித்தார்.
♦
தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்காய சௌத்ரி ஆகியோர் ராஜமாதாவிடம் இருந்து ஏழுமலையான் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் வெள்ளி அகண்ட தீபங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட ராஜ மாதா பிரமோதா தேவிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.