Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»விடியாத அதிகாலை!. ஏசி வெடித்த விபத்தில் தீயில் கருகிய 9 உயிர்கள்!. டெல்லியில் சோகம்!
    இந்தியா

    விடியாத அதிகாலை!. ஏசி வெடித்த விபத்தில் தீயில் கருகிய 9 உயிர்கள்!. டெல்லியில் சோகம்!

    Editor web3By Editor web3May 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Delhi fire ac blast
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைநகர் டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியில் உள்ள விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தால் கட்டிடத்தில் தீ மளமளவென பரவியது. தீப்பிழம்புகள் சூழ்ந்ததால் கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

    சுமார் 12 வாகனங்களில் வந்த 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரம் போராடி காலை 6 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீரர்களின் துரித நடவடிக்கையால் கட்டிடத்தின் பால்கனி வழியாக 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்த இருவர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கட்டிடத்தில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாக குளிர்சாதன பெட்டி (AC) வெடித்துச் சிதறியதே தீ பரவியதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயராமல் இருக்க மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி மலேரியா பயமில்லை!. உலகின் முதல் பிரத்யேக மருந்து ‘Coartem Baby’!. WHO ஒப்புதல்!
    Next Article அதிரடியாக எகிறிய எலுமிச்சை விலை!. ஒரு கிலோ ரூ. 320-க்கு விற்பனை!. மக்கள் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.