திருமணத்திற்கு பிறகும் கூட, கணவனோ, மனைவியோ வேறுஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதும், அதற்கு உடந்தையாக இருக்கும் துணையை கொல்வதும் அவ்வப்போது நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஆனால் சமீபத்தில் வடமாநிலங்களில் திருமணமான பெண்கள் சில நாட்களிலேயே காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்வது தொடர்கதையாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சோனம் ரகுன்ஷி என்ற பெண், தனது தேனிலவின் போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதேப் போன்றதொரு சம்பவம் பீகாரிலும் நடந்தேறியுள்ளது. பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் குஞ்சா. இவருக்கு கடந்த மே மாதம் பிரியான்ஷூ என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 45 நாட்களுக்கு பிறகு, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் புதுமனைவி. அதன்படி கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி இரவு நபிநகர், லெம்போகாப் பகுதியருகே, பிரியான்ஷூ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையின் போது புது மனைவியின் திட்டம் தெரியவந்துள்ளது.

தனது சொந்த மாமா ஜூவன் சிங்குடன் குஞ்சாவுக்கு தவறான பழக்கமாகியுள்ளது. குஞ்சாவின் திருமணத்திற்கு பிறகு கணவர் பிரியான்ஷூ இவர்களது உறவிற்கு தடையாக இருந்துள்ளார். இதனால் இருவரும் திட்டம் தீட்டி, கூலிப்படையை ஏவி கணவரை சுட்டுக் கொன்றுள்ளார் குஞ்சா. இதனையடுத்து குஞ்சாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version