வாரிசு நடிகர்கள் சினிமாவில் வருவது என்பது வழக்கமான ஒன்று தான். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே அடுத்தடுத்து சினிமாவை ஆள்வது என்னவோ வாரிசு நடிகர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகராக வளர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் நேரடியாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு வெளியான ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவரது மகனான சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் புரமோஷனில் சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார் எழுந்தது.

இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பேசும் போது, நான் வேறு அப்பா வேறு என பேசியிருந்தது விமர்சனங்களை சந்தித்தது. பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 2-ம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட சூர்யா, வாயில் பபுல்காம் மென்றுகொண்டு போஸ் கொடுத்தார். இந்த செயல் மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களுக்கு அவரை இட்டுச் சென்றது. இந்த நிலையில், சூர்யாவின் சர்ச்சை பேச்சு மற்றும் இன்னும் பல வீடியோக்களை நீக்குமாறு சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து சிலருக்கு மிரட்டல் வந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”எங்கள் தரப்பில் இருந்து யாருக்காவது அழைப்பு வந்து, மிரட்டல் நடந்து இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக” கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version