ணிப்பூரில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தேய்-குகி இன மோதல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வன்முறை, கொலைகள், இடம்பெயர்வுகள் ஆகியவை மாநிலத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. இதனால் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2025 பிப்ரவரி 9-ஆம் தேதி, பைரன் சிங் தனது பதவியை  ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக ல் கடந்த 4ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து, மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்று ஒரு நாள் கூட முழுமையடையாத நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரவிலும் பதற்றம் நீடித்தது. குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. குக்கி சமுகத்தினர் துணை முதலமைச்சர் நெம்ச்சா கிப்ஜென் புகைப்படத்துடன் ‘துரோகி’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை அடித்து உடைத்து தீவைத்தனர். பாதுகாப்பு படையினர் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு நிலைமை மோசமடைந்தது. குக்கி சமுகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version