மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதிகளை அறிவித்தார். தொடர்ந்து பேசியவர்,
“பெண்களுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைத்த 6 மாதத்திற்குள் மேற்குவங்க மாநிலத்தில் UCC அமல்படுத்தப்படும். தற்காப்பு பயிற்சிகள் வழங்க துர்கா சுரக்சா குழு ஏற்படுத்தப்படும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும். வங்காளச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் நிலவிவரும் ஆழ்ந்த விரக்தியைப் போக்கிட, இந்தத் தேர்தல் அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும்.
வேலையில்லா இளைஞர்களுக்கும், அச்சத்துடன் வாழ்ந்து வரும் பெண்களுக்கும் இது ஒரு புதிய வழியை ஏற்படுத்தும். கம்யூனிச ஆட்சியை அகற்றுவதற்காக, வங்காள மக்கள் மம்தாவை தேர்ந்தெடுத்தனர். ஐந்து ஆண்டுகள் போதாது என்று அவர் கூறியதால், அவருக்கு மற்றொரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், ‘சிண்டிகேட்’ ஆதிக்கம், ரவுடியிசம் மற்றும் ஊடுருவல்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அவர் மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தார்.
ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது. ஒரு காலத்தில் மம்தாவை ஆதரித்த அதே குடிமக்கள், அச்சமும், ஏமாற்றமும் அடைந்து, தற்போது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு,
பயிர்களுக்கு நியாயமான விலை, நெல், ஜூட், மாம்பழம் பயிரிட உதவி, மத்திய நலத்திட்டங்கள் அனைத்தையும் தகுதியானவர்களுக்கு வழங்குதல்.
தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பசு மாடு கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும்,
வடக்கு மேற்குவங்க மேம்பாடு : டார்ஜிலிங் தேயிலை மற்றும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்.
குர்மி மற்றும் ராஜ்பன்ஷி சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினமாக சேர்க்க நடவடிக்கை.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல், பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள்.
மணல் கடத்தலை கட்டுப்படுத்த சிறப்பு டாஸ்க் force ஏற்படுத்தப்படும்,
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஊதியம் பெறும் தனிநபர்களுக்கும் அகவிலைப்படி உறுதி செய்யப்படும்,
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, 7-வது ஊதியக் குழுப் பரிந்துரைகளை வெறும் 45 நாட்களுக்குள் அமல்படுத்துவதன் மூலம் அனைத்து ஊழியர்களையும் கௌரவிக்கும். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும், அதற்கான நிறைவுச் சான்றிதழ்களுடன் சேர்த்து முழுமையாகச் செயல்படுத்துவோம்.
மேலும், நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, மேற்கு வங்காளத்திலும் பிரதமர் மோடியின் ‘கரீப் கல்யாண் யக்ஞா’ திட்டத்தை தொடங்கி வைப்போம். மத்திய, கீழ், நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. இந்த இடைவெளி களையப்படும் வரை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதிக்கும், 5ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் 3,000 ரூபாய் நேரடியாகச் செலுத்தபடும் என்று தெரிவித்துள்ளார்.

