இன்னும் ஐந்து அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத போர் வரும் என்று எலான் மஸ்க் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து ‘X’ தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், “போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூடுதல் விளக்கத்தை வழங்கவில்லை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version