மத்திய மெக்சிகோ மாநிலமான குவானாஜுவாடோவின் சலமன்கா நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு மக்கள் கூடியிருந்தபோது, ​​ஆயுதம் ஏந்திய ஒரு குழு மைதானத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. சம்பவ இடத்திலேயே பத்து பேர் கொல்லப்பட்டனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் குற்றவியல் வன்முறை அதிகரித்துள்ளது. சில குழுக்கள் மாகாண அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. அதிகாரிகளை அடிபணியச் செய்ய சில குற்றக் குழுக்கள் முயற்சிக்கின்றன. அதை அவர்களால் ஒருபோதும் சாதிக்க முடியாது” என எச்சரித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version