மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபயங்கர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் அல்லது தங்களது வான்வெளியையும் நிலப்பரப்பையும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குத் துணை நின்றால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் எண்ணெய் உற்பத்தியே இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் ஈரான் ராணுவத் தளபதிகள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் அமெரிக்கா தனது படைகளைத் குவித்து வரும் நிலையில், இத்தகைய பகிரங்க மிரட்டல் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பிராந்திய நாடுகள் உதவ வேண்டாம் என்றும் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) வான்வெளித் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித்  மூசாவி எச்சரித்துள்ளார், இது ஒரு பரந்த மோதல் குறித்த அச்சத்தை எழுப்புகிறது. உலகளாவிய எரிசக்தி சந்தைகள் பதற்றத்தில் இருப்பதால், இந்த நிலைமை பெரும் பொருளாதார வீழ்ச்சியைத் தூண்டக்கூடும்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version