தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்கில் மன்னிப்பு வழங்க வேண்டுமென்று இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்ஸொக்கிடம், பிரதமர் நெதன்யாகு  கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கடந்த 2019ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 3 தனித்தனி வழக்குகளில் லஞ்சம் வாங்குதல், மோசடி மற்றும் உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் நெதன்யாகு மீது சுமத்தப்பட்டது.

இந்தநிலையில், தனக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணையில் மன்னிப்பு வழங்குமாறு இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்ஸொக்கிடம் பிரதமர் நெதன்யாகு கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் உள்ள பலரைப் போலவே, விசாரணையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார். நல்லிணக்கத்தை ஊக்குவிக்க பெரிதும் உதவும் என்று உறுதியாக நம்புவதாகவும், தேசிய ஒற்றுமையை மீட்டெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய வரலாற்றில் பிரதமர் பதவியில் இருக்கும் போதே ஊழல் விசாரணையை எதிர் கொண்ட முதல் பிரதமர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வழக்கு நடவடிக்கையில் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குரல் கொடுத்தார். வழக்கு விசாரணைக்கும் டிரம்ப் எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும்  நெதன்யாகுவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version