திமுக ஆட்சியில் பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்றிரவு நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, அவர் மேலும் கூறியதாவது:

முதலமைச்சர் ஸ்டாலின், என்னை விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டுகிறார். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் நான் பல திட்டங்களை கொண்டு வந்தேன். நான் விவசாயத் தொழிலையே செய்கிறேன். அவர் போல மேடை போட்டு விவசாயி போல நடிக்கவில்லை.

தாம் விவசாயி எனக் கூறினால் போதுமா, விவசாயப் பயிர்கள் குறித்து ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா.. விவசாய பயிர்களின் பெயர்கள்தான் தெரியுமா.. அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு – அவிநாசித் திட்டத்தை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டது திமுக அரசு.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். கொலை-கொள்ளை சாதாரணமாக நடக்கிறது. பாட்டிகளுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள்கள் மிக சாதாரணமாக கிடைக்கிறது. சட்டம்-ஒழுங்கு நிலை முழுவதும் சீர்கெட்டு விட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version