வடமேற்கு பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஒரு வீட்டை பனிச்சரிவு தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் (PMD) தென்மேற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து அப்பகுதியில் மேலும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து  லோயர் சித்ரல் ராவ் துணை ஆணையர் ஹாஷிம் அசீம் கூறுகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பனிச்சரிவில் சிக்கினர், இதில் ஒன்பது பேர் இறந்து கிடந்தனர், ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது,” பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுவதாகவும், போலீஸார் கூறுகின்றனர்.

கடும் பனிப்பொழிவு மற்றும் அப்பகுதி தொலைதூரத்தில் அமைந்திருப்பதால் மீட்புப் பணிகள் தடைபட்டதாக அசீம் கூறினார். உடல்கள் அடக்கம் செய்வதற்காக த்ரோஷுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். “மழை மற்றும் பனிப்பொழிவின் போது சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version