உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதின் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் சேர விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இப்போரில் 2 நாடுகள் தரப்பிலும் பல ஆயிரம் பேர் பலியாகி விட்டனர்.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டிரம்ப் புதிய அமைதித் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து மாஸ்கோவில் புதினை சந்தித்து அமெரிக்க அதிகாரிகள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், “புதினருடனான அமெரிக்க குழுவினரின் பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது. பேச்சுவார்த்தை விவரங்களை இங்கு வெளியிட முடியாது. இது இருதரப்பு சம்பந்தப்பட்டது. ஆனால் புதின் பேச்சில் இருந்து, போர் முடிவுக்கு வர வேண்டும் என புதின் விரும்புவது தெரிகிறது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version