Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இவரே ரியல் ஹீரோ…. சிட்னியில் 15 பேரை கொன்ற தீவிரவாதியுடன் மோதிய அல்-அகமது
    உலகம்

    இவரே ரியல் ஹீரோ…. சிட்னியில் 15 பேரை கொன்ற தீவிரவாதியுடன் மோதிய அல்-அகமது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    al ahmed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது எனும் நபர் தடுத்துள்ளார். அவரது வீர தீர செயலுக்காக இப்போது உலக அளவில் பேசப்படுகிறார்.

    துப்பாக்கியுடன் இருந்த தீவிரவாதியை லாவகமாக பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவரை தரையில் தள்ளினார் அகமது அல் அகமது. அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

    நடந்தது என்ன? – சிட்னி நகரில் உள்ள போண்டி கடர்கரையில் ‘ஹனுக்கா’ விழாவை யூதர்கள் கொண்டாடிய போது இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் அப்பா (50), மகன் (24) என ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    யார் இந்த அகமது அல் அகமது? – 43 வயதான அகமது அல் அகமது, சிட்னியில் பழக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே அவர் மறைந்து கொண்டார். தொடர்ந்து தீவிரவாதி ஒருவரை தடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார்.

    இதன் பின்னர் மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அகமது அல் அகமது காயமடைந்தார். அவருக்கு கை பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

    “அவர் ஒரு ரியல் ஹீரோ அது 100% உறுதி. அவர் மருத்துவமனையில்தான் உள்ளார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. அவர் நலமுடன் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்” என அகமது அல் அகமதுவின் உறவினர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

    ‘மிகவும் தைரியமான நபர்’ என அகமதுவை அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பாராட்டி உள்ளார். அவருக்கு உதவும் நோக்கில் இணையவழியில் நிதி திரட்டும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1.32 லட்சம் டாலர் நிதி இதுவரையில் திரட்டப்பட்டுள்ளதாக தகவல்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமித்ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்!. தமிழகத்தில் 65 தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டம்?
    Next Article உச்சகட்ட மோதல்! அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்தால் பாமகவில் இருந்து விலகுவேன்.. ஜிகே மணி அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    August 9, 2026

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    August 9, 2026

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.