அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியத்திற்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை பாலஸ்தீன ஆதரவு நபர் நிகழ்த்தியதாக கூறப்படும் கருத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனை அளிப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version