Close Menu
    What's Hot

    தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!

    அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்
    உலகம்

    அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puthin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா பொய் சொல்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார்.

    புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது. அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். புடினின் வீடு மீதான தாக்குதல் ஒரு புனைகதை. அவர்கள் பொய் சொல்கின்றனர்.

    எங்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா மறுப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்கள். மேலும், ரஷ்யர்கள் கடந்த காலங்களில் எங்களது அமைச்சரவை கட்டடத்தை ஏற்கனவே குறிவைத்துள்ளனர்.

    உக்ரைன், ராஜதந்திரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக, ரஷ்யா எப்போதும் அத்தகைய நடவடிக்கைகளையே எடுக்கிறது. இது எங்களுக்கிடையேயான பல வேறுபாடுகளில் ஒன்றாகும். இந்த நேரத்தில் உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். நிலையான அமைதியை உருவாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை ரஷ்யா சீர்குலைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    இது நல்லதல்ல!

    இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது வீட்டை உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த குறிவைத்தது என்று ரஷ்ய அதிபர் புடின் என்னிடம் கூறினார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலம்
    Next Article கிரிக்கெட்டின் பொக்கிஷம்!. ஏலத்திற்கு வரும் சர் டான் பிராட்மேனின் வரலாற்று சிறப்புமிக்க பேக்கி கிரீன் தொப்பி!.
    Editor TN Talks

    Related Posts

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம்: தொழிலாளர் கட்சியில் புதிய தலைமையால் அரசியலில் முக்கிய திருப்பம்

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!

    அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    பரந்தூர் விமானநிலைய திட்டம் தொடர்ந்து நடக்கும்!. மத்திய அரசு விளக்கம்!

    முதலமைச்சர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா – நடிகர் பிரபு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.