வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானில் இணையச் சேவையை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்க்குடன் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார், இஸ்லாமியக் குடியரசில் பெரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தனது எச்சரிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தலைவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார்.

“ஈரான் தலைவர்கள் நேற்று தொடர்பு கொண்டனர். அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் பேச விரும்புகிறார்கள்,” என்று Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

ஈரான் அரசாங்கம் 2022-ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்த வன்முறைப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

டிசம்பர் 28 அன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள், பின்னர் 1979 இஸ்லாமிய புரட்சியிலிருந்து ஆட்சி செய்து வரும் ஈரான் அதிகாரிகளுக்கு எதிராக மாறின.

இதற்கிடையில், ஈரானில் இணைய சேவையை மீட்டெடுக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை வைத்தார்.
இணைய அணுகலை மீண்டும் வழங்குவது குறித்து, பில்லியனர் எலான் மஸ்க் உடன் பேச திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டார்லிங்க் எனப்படும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பதிலளித்த டிரம்ப், “இந்த வகை விஷயங்களில் அவர் மிகவும் திறமையானவர்; அவரது நிறுவனம் மிகவும் சிறந்தது”
என்று கூறினார்.

மேலும், இதுவரை எலான் மஸ்க் அல்லது SpaceX இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.இணைய முடக்கம் காரணமாக, வியாழக்கிழமை முதல் ஈரானிலிருந்து தகவல் பரிமாற்றம் பெரும்பாலும் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version