எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோஃபியாவில் அஃபார் மாகாணத்தில் ஹேலிகுப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக இருந்த இந்த எரிமலை நேற்று (நவ. 24) வெடித்துச் சிதறத் தொடங்கி உள்ளது.

பல கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்பு புகைகள் எழுந்தநிலையில், லாவா குழம்பும் வெளியேறி வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே ஹேலிகுப்பி எரிமலை வெடித்திருக்கும்நிலையில், அதன் சாம்பல் மேகங்கள், இந்தியாவின் வடமேற்கு பகுதி வரை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் வான் பரப்பில் எரிமலையின் சாம்பல் மேகங்கள் படர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லி, என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை சுமார் 10 முதல் 15 கி.மீ உயரம் வளிமண்டல வரை பரவி உள்ளதன் காரணமாக டெல்லி, அரியானா பகுதிகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version