பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கு பேரிச்சை இனிப்புடன் பால் குடிப்பது கூடுதல் பலன் தரும். சரி, அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்ப்போம்.
WhatsApp Image 2025 05 10 at 08.38.57
இருமல்: பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெதுவெதுப்பான பாலை குடித்தால் நீடித்த இருமலை போக்க முடியும். இதற்காக பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல்: இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
தூக்கமின்மை: தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க சரியாகலாம்.
நெஞ்சு வலி: உயர் இதயத்துடிப்பு, இதய பாதிப்புகள் இருந்தால் தினம் 2 பேரிச்சையை அரை கிளாஸ் பாலில் ஊற வைத்து 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் கட்டுப்படுத்தலாம்.
மலச்சிக்கல்: 5-8 பேரிச்சம்பழத்தை அரை லிட்டர் பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் குடிக்க வேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகும் சில பேரிச்சைகளை சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம்: 50-70 கிராம் அளவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிடுங்கள். இதை மூன்று வாரங்கள் செய்து பாருங்கள்.
வாயு: வாயுத்தொல்லை இருந்தால் பேரிச்சம்பழத்துடன் இடித்த சீரகத்தை 2:1 என்ற அளவில் பாலின் கலந்து குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.
பாலூட்டும் தாய்க்கு நல்லது: பாலில் ஊற வைத்த பேரிச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. பாலும் நன்கு சுரக்கும்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version