தமிழ் சினிமாவில் இந்த வருட சர்ப்ரைஸ் திரைப்படமாக ‘லப்பர் பந்து’ திரைப்படம் அமைந்தது.அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், நடிகை சுவாசிகா ஆகியோருக்கு ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே தமிழில் ‘வைகை’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சுவாசிகா. அந்தப் படத்துக்கு பின் வேறு சில படங்களில் நடித்தாலும் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.இதனால் மலையாள சினிமா பக்கம் சென்றவர், அங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இந்த நிலையில், தற்போது மீண்டும் ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து இருக்கிறார். வெற்றி விழாவில் கூட, தமிழ் சினிமாவில் வெற்றியை ருசிக்க இத்தனை காலம் ஆகிவிட்டது என சுவாசிகா உருக்கமாக பேசியிருந்தார்.சுவாசிகா கடந்த ஜனவரி மாதம் தான் பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்தார். பிரேம் ஜேக்கப்பும் நடிகர் தான். இருவரும் ஒன்றாக சீரியல் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.