Close Menu
    What's Hot

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இதுதான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் லட்சனமா? மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அன்புமணி ஆத்திரம்
    அரசியல்

    இதுதான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் லட்சனமா? மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அன்புமணி ஆத்திரம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருத்தணி அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, இதுதான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் லட்சனமா? என வினவியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த  கொண்டாபுரம் கிராமத்தில் அரசு பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் யோகித் என்ற மாணவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அடைந்தேன். மாணவர் யோகித்தை இழந்து வாடும் அவரது  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவு தான் ஓர் அப்பாவி மாணவரின்  உயிர் அநியாயமான பறிபோயிருக்கிறது. மாணவரின் எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளுடன் இருந்த அவரது பெற்றோரின் துயரத்திற்கு ஆட்சியாளர்கள் எவ்வாறு ஆறுதல் கூறப்போகிறது.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளின் கட்டிடங்களும்,  சுற்றுச்சுவர்களும் இந்த நிலையில் தான் உள்ளன. பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்களை புதிதாகக் கட்டித் தருவதாக பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் ஒன்றை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், பலவீனமான நிலையில் உள்ள பள்ளிகளில் 10%  பள்ளிகளில் கூட அந்தத் திட்டத்தின்படி  சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்திட்டத்திற்கு  ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

    மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நிலையில் பள்ளிகளின் கட்டமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ’’கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெயரில் திரைத்துறையினரை அழைத்து வந்து கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடமிருந்து எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறார் என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    இனியாவது வெட்டிக் கொண்டாட்டங்களை விடுத்து பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளி சுவர் இடிந்து விழுந்த மாணவரின் குடும்பத்திற்கு  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலக்னோவில் இன்று 4வது டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
    Next Article 6 குழந்தைகளுக்கு எய்ட்ஸ்… ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
    Editor TN Talks

    Related Posts

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    July 29, 2026

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    July 29, 2026

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.