Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஆட்சி மாறியதும் டிஎன்பிஎஸ்சி அட்டவணை மாறும், அதிக வேலை கிடைக்கும்.. அன்புமணி உறுதி
    அரசியல்

    ஆட்சி மாறியதும் டிஎன்பிஎஸ்சி அட்டவணை மாறும், அதிக வேலை கிடைக்கும்.. அன்புமணி உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    டி.என்.பி.எஸ்.சி மூலம் 2026ஆம் ஆண்டில் வெறும் 6 போட்டித் தேர்வுகள் மட்டுமே என விமர்சித்துள்ள அன்புமணி ராமதாஸ், ஆட்சி மாறியதும் அட்டவணையும் மாறும், அதிக வேலை கிடைக்கும் என உறுதி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    தமிழக அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை  தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம்  நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை  த்மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.   மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான  முதல் தொகுதி பணிகள், கிராம நிர்வாக அதிகாரி  உள்ளிட்ட  பதவிகளுக்கான  4-ஆம்  தொகுதி பணிகள்  என  மொத்தம் 6 போட்டித் தேர்வுகள் மட்டும் தான் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ளன. இது எந்த வகையிலும் போதுமானவையல்ல.

    2025-ஆம் ஆண்டில்  மொத்தம் 7 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. அதன்படி  7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கையை வெளியிட்டு விட்ட டி.என்.பி.எஸ்.சி, அவற்றில் சில தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்வுகளின் மூலம்  9757  பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.

    2026-ஆம் ஆண்டில்  6 போட்டித் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன என்பதையும்,  அத்தேர்வுகளுக்கான  பணிகளின் காலியிடங்களாக தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது  அதிகபட்சமாக 6 ஆயிரம் பேருக்குக் கூட அடுத்த ஆண்டில் வேலை வழங்கப்படாது என்பது தான் உண்மை.  அரசு வேலைகளுக்காக 1.30 கோடி படித்த இளைஞர்கள் காத்திருக்கும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு கூறுவது  கேலிக் கூத்தாகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  அதுமட்டுமின்றி, கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் நிரந்தர அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு எந்த அளவுக்கு  துரோகம் செய்துள்ளது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை  திமுக அளித்திருந்தது.  அவற்றில்  66 வாக்குறுதிகளை மட்டும் தான்  திமுக அரசு முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 439  வாக்குறுதிகள்  முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அந்த வகையில்  தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக  439 துரோகங்களை செய்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். அந்த  439 துரோகங்களிலும் மிகவும் மோசமானது படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி  ஏமாற்றியது தான்.

    அரசு வேலை வழங்குவதாகக் கூறி  படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.  அதைத் தொடர்ந்து அமையும் புதிய அரசில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்  தேர்வுகளின் அட்டவணை நீளமாகும்; குறைந்தது 50 ஆயிரம் நான்காம் தொகுதி பணிகள் உள்பட 2026-ஆம் ஆண்டில்  டி.என்.பி.எஸ்.சி மூலம் வழங்கப்படும் அரசு பணிகளின்  எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அந்தப் பதிவில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலி செய்திகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறதா..? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரபரப்பு பேச்சு..!!
    Next Article தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.