கோவை வடக்கு மாவட்ட தி.மு.கவில் அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட தயாராகி வருகின்றனர். கோவை தெலுங்குபளையம் S.J மண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் வரும் 22-ந் தேதி இந்த கூட்டம் நடக்கவுள்ளது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவியை நீக்க கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப உள்ளதாம்.

தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து கூட்டத்திற்கு முறைப்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அதிருப்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவை மீட்க வருகை தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். என்று வாசகத்துடன் திமுக நிர்வாகிகளின் அலைபேசி எண்ணுடன்
தொண்டாமுத்தூர் தொகுதி திமுக கழக முன்னோடிகள் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் உள்ள தி.மு.க முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குரூப்புகளில் இந்த செய்தி பரவி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version