ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.

60 வார்டுகளைக் கொண்ட ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் இன்று காலை தொடங்கியது. துணை மேயர் செல்வராஜ், ஆணையர் அர்பித் ஜெயின் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வெற்றி பெற்று விட்டு தவெகவுக்கு மாறிய சபுராமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு. ஏற்பட்டது.

மேலும் 20 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன், பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் அவரை விரலை நீட்டி மிரட்டினார். அப்போது திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் அவரை இழுத்து சென்று அமர வைத்தனர்.

திமுக கவுன்சிலருக்கும் காங்கிரஸிலிருந்து வெற்றி பெற்று தமிழக வெற்றி விளக்கத்திற்கு சென்ற பெண் கவுன்சிலர் இடையே மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் மத்தியில் வாக்குவாதம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version