Close Menu
    What's Hot

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»வெல்லும் தமிழ்ப் பெண்கள்! – முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் நடத்தப்படும் மாபெரும் விழா!
    அரசியல்

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்! – முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் நடத்தப்படும் மாபெரும் விழா!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டுள்ள முன்னோடித் திட்டங்களின் சாதனைகளையும், பயனடைந்த மகளிரின் வாழ்க்கை அனுபவங்களையும், மாநிலத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நாளை (12-12-2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்,.

    WhatsApp Image 2025 12 11 at 6.30.31 PM

     

    முதலமைச்சரால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிருக்கும் மாதம் ரூ. 1000 விகிதம் இதுவரை ரூ. 27,000 வழங்கப்பட்டிருக்கிறது. திட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 15, 2023 முதல் நவம்பர் 2025 வரை ரூ.30,838.45 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தத் திட்டத்தில் கூடுதல் பெண்கள் பயனடையும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, இத்திட்டம் 12-12-2025 அன்று இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. புதிதாக இலட்சக்கணக்கான பெண்கள் இணைக்கப்பட்டு இனிவரும் மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பெறவிருக்கின்றனர்.

    1500x900 44509070 udhay nidhi stalin 1

    இந்நிகழ்வில் சமூக சேவகரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட துளசிமதி முருகேசன், திரைக் கலைஞர்கள் சத்யராஜ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள்,அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    மாநில அளவில் நடைபெறும் இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களினால் பயன்பெற்ற, சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் வகையில் அமையவிருக்கும் இந்த முழு நிகழ்வையும் தமிழ்நாடு அரசு பெண் அதிகாரிகளே ஒருங்கிணைக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. இது பெண்களுக்கான அரசு; பெண்களை முன்னேற்றும் அரசு என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்த விழா அமையும் என்கிறார்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள்.

    மேலும், கல்வி, தொழில் முனைவு, மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், உற்பத்தி, அரசியல், கலை, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களும், அரசின் திட்டங்களைப் பயன்படுத்திய அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

    DMK mkstalin Udhayanidhi Stalin வெல்லும் தமிழ்ப் பெண்கள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகைதி-2 கைவிடப்பட்டதா? கார்த்தி சாென்னது இதுதான்
    Next Article நடிகை நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து?
    Editor TN Talks

    Related Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.