Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை

    கிரிக்கெட் மைதானம் அருகே திடீர் காட்டுத்தீ!. தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்! 

    பழம்பெரும் தெலுங்கு நடிகை பவள சியமலா காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மேகதாது அணை:  மத்திய அரசின் பதிலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்
    அரசியல்

    மேகதாது அணை:  மத்திய அரசின் பதிலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா, மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலுக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த பதில் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாகவும் விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி நதிநீர் தொடர்பாக நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் வழங்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதுடன், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், எந்த மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஆற்றின் மேல்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி நினைவூட்டியுள்ளார்.

    மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் அளித்த பதில், காவிரி நீரை நம்பி வாழும் மாநில மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

    CauveryIssue EdappadiPalaniswami MekedatuDam TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!
    Next Article மேகதாது அணை; கர்நாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் செல்வப்பெருந்தகை கண்டனம்
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை

    July 28, 2026

    கிரிக்கெட் மைதானம் அருகே திடீர் காட்டுத்தீ!. தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்! 

    July 28, 2026

    பழம்பெரும் தெலுங்கு நடிகை பவள சியமலா காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை

    கிரிக்கெட் மைதானம் அருகே திடீர் காட்டுத்தீ!. தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்! 

    பழம்பெரும் தெலுங்கு நடிகை பவள சியமலா காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

    சூப்பர் காந்தம்: செயற்கை சூரியனை உருவாக்கும் சீனா… 2030-க்குள் மின்சார உற்பத்திக்கு திட்டம்!

    AC-யும் இல்ல.. வாஷிங்மெஷினும் இல்ல.. ஆனா கரண்ட் பில் ரூ.14,000..!! புலம்பும் வியாபாரி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.