Close Menu
    What's Hot

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சிவகங்கையில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்
    அரசியல்

    சிவகங்கையில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps angry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் அவர் பிரசாரம் செய்கிறார். அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் அவர் பேசுகிறார்.

    நாளை மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகேயும், இரவு 7:45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலிலும் மக்களை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் தங்குகிறார்.

    பின்னர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை சன் ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

    மாலை 4.30 மணி அளவில் மானாமதுரை தேவர் சிலை அருகே அவர் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அவர் செல்கிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரை வரவேற்று பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரவேற்பு தோரண வாயில்கள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.‘

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய மகளிரின் சிந்தூரத்திற்காகவே ஆபரேஷன் சிந்தூர் – ராஜ்நாத் சிங்
    Next Article தொகுதி மறுசீரமைப்பு – மத்திய அரசு பதில்
    Editor TN Talks

    Related Posts

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    July 17, 2026

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    July 17, 2026

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.