சிபிஐ இயக்குநர் பதவியை ஓராண்டு காலம் நீட்டித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட்டுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கியிருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், பிரவீன் சூட் போன்ற அதிகாரிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கவே அவருக்கு பாஜக அரசு பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version