சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவர் முத்தமிழரிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முகம்மது அலி தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி, இலக்கியம், சமூக நீதி மற்றும் அரசியல் துறைகளில் அழியாத முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை தனது அரசியல் வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்ட அவர், சிறுபான்மை சமூக மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கல்வி உதவித்தொகைகள், மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக தமுமுக வின் நீண்டகால கோரிக்கை ஏற்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதோடு,  தமுமுக விற்கு தனது சொந்த செலவில் 2 ஆம்புலன்ஸ்களையும் வழங்கினார்

அவரது எழுத்தும், பேச்சும், சிந்தனையும் தலைமுறைகளை வழிநடத்தி வருகிறது. தமிழ் மக்களின் உரிமைகள், கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒப்பற்ற தலைவர் அவர்.

“ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இப்போது ஓய்வு கொண்டிருக்கிறார்.”

சமூக நீதி காத்த அந்த மாமனிதரை போற்றி நினைவு கூறுவோம். கலைஞரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என புழல் ஷேக் முகம்மது அலி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version