மும்பையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அண்ணாமலை சர்ச்சையாக பேசி இருப்பது மகாராஷ்டிராவில் காட்டுத்தீயாய் எதிர்ப்பை பெற்று வருகிறது.
மும்பையில் நாளை மறுநாள் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தமிழகர்கள் வசிக்கும் நவிமும்பை, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிர்ச்சாரம் செய்தார். அப்போது மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமில்ல. அது ஒரு சர்வதேச நகரம் என பேசியுள்ளார். மும்பை மகாரஷ்டிராவுக்கு மட்டுமில்லை என அண்ணாமலை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிர நவநிர்மான் சேஜா ராஜ் தாக்கரே, “ தமிழ்நாட்டில் இருந்து வந்த அண்ணாமலைக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறு பேசுவதா? என கேட்டுள்லார்.
தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த உத்தரவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, “ அண்ணாமலை பாஜவில் ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டை கூட காப்பாற்றி கொள்ள முடியாமல் தோற்றவர். அவர் பிரதமரை போல் பேசுகிறார். தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் வேறு வேறு பகுதிகள்” என கடிந்துள்ளார்.
இந்த சூழலில் அண்ணாமலை சர்ச்சை குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், “ அண்ணாமலைக்கு சரியாக இந்தி பேச வராது. அவரின் கருத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம். அண்ணாமலை மகாரஷ்டிராவை சேர்ந்தவர் இல்லை. அவர் தேசிய தலைவரும் இல்லை” என கூறியுள்ளார்
