Close Menu
    What's Hot

    கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!

    மாநிலப் பொறுப்பு கேட்ட சி.வி.சண்முகம்.. முடிவு எடுக்க தயங்கும் தவெக தலைமை! நடக்கப்போவது என்ன..??

    தமிழகத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வீழ்ச்சி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கூட்டணி இல்லையென்றால் திமுக 10% வாக்குகள் கூட வாங்காது.. அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எள்ளல்…
    அரசியல்

    கூட்டணி இல்லையென்றால் திமுக 10% வாக்குகள் கூட வாங்காது.. அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எள்ளல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    newproject11 1746516489
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் திமுகவுக்கு 10% வாக்கு வங்கி கூட கிடையாது என்று அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா விஸ்வநாதன் கூறியுள்ளார்.

    திண்டுக்கல்லில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பூத்து கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளரான நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சி என்பது கிடையாது.அமித் ஷா சொல்லும் பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

    திமுக கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை. திருமாவளவனின் சக்தி திருமாவளவனுக்கே தெரியவில்ல. திமுகவை விட ஓட்டு வங்கி அதிகம் உள்ள கட்சி திருமாவளவன் கட்சி தான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் என்பதே கிடையாது திருமாவளவன் உள்ளிட்ட நபர்கள் தான் திமுகவை காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் திமுகவுக்கு 10 சதவீத வாக்கு வங்கி கூட இல்லை என்றார்.

    தமிழகத்தில் வரும் 2026ம் ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி சிறப்பாக வெற்றி பெறும் மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளனர் மக்களுக்காக திமுக அரசு எந்த ஒரு செயலும் செய்யவில்லை என கூறினார்.

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அதிக அளவு மரணங்கள் நடைபெற்று வருகிறது. காவல்துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை பற்றி எதையும் கவலைப்படுவது கிடையாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றும் அவருக்குத் தெரியாது.

    போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கொக்கைன். கஞ்சா, போலி மதுபான விற்பனை என தொடர்ந்து போதைமயமாக்கல் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் போதை விற்பனை நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் பிரச்சனை, பொது பிரச்சனைகள் திமுக கவனம் செலுத்துவது இல்லை. பணம் வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது. பணத்தை வைத்து ஆட்சிக்கு வரலாம் என்பது பகல் கனவு என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐடி கம்பெனிகளில் AIயால் வேலை இழப்பு இல்லை… zoho நிறுவன தலைவர் சார்லஸ் காட்வின்
    Next Article நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பா? விவசாயிகள் போராட்டம்..
    Editor TN Talks

    Related Posts

    மாநிலப் பொறுப்பு கேட்ட சி.வி.சண்முகம்.. முடிவு எடுக்க தயங்கும் தவெக தலைமை! நடக்கப்போவது என்ன..??

    July 11, 2026

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    July 11, 2026

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!

    மாநிலப் பொறுப்பு கேட்ட சி.வி.சண்முகம்.. முடிவு எடுக்க தயங்கும் தவெக தலைமை! நடக்கப்போவது என்ன..??

    தமிழகத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வீழ்ச்சி?

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பால் பரபரப்பு!

    ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள்: சுங்க வரி முழுமையாக ரத்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.