பாமகவை அபகரிக்க முயற்சிப்பதாக அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நடந்த பாமக கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
நான் வளர்த்த கட்சியை அவர் (அன்புமணி) அபகரிக்க முயற்சிக்கிறார். தேர்தல் ஆணையத்தையே அவர் விலை கொடுத்து வாங்கி விட்டார். தேர்தல் ஆணையம் விலை போய் விட்டதாக அங்குள்ள அதிகாரியே தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்படி அவர் கூறினார். அதன்படியே பாமக தொடர்பான தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
பாமகவின் தலைவர் நான்தான். அவரது தலைவர் பதவி காலாவதியாகி விட்டது. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். இதை என் மக்கள் அறிவர். ஆனால் நீ பேசுவதெல்லாம் நீ பொய். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என நீ நினைக்கிறாய். அது நடக்காது. எனது மக்கள் என்னுடனேயே இருக்கிறார்கள்.
கட்சித் தொடங்கியபோது, நான் 1 ஓட்டு போடுங்கள். 1 ரூபாய் கொடுங்கள் என எனது மக்களிடம் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். முதல் தேர்தலில் தனித்து 4 எம்எல்ஏ சீட்டுகளை ஜெயித்தோம். ஆனால் கூட்டணி வைத்தும் தற்போது 5 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். இதற்கு அவரின் தவறான முடிவுதான் காரணம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
