Close Menu
    What's Hot

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 6, 2026Updated:January 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thrirupparangkundram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. எனவே, தனி நீதிபதி உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.

    தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஜன.6) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தீபம் ஏற்றுவதற்கான சில வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    நீதிபதிகள் தீர்ப்பின் விவரம் வருமாறு: 1996 நீதிமன்ற உத்தரவில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை பின்பற்றி  தேவஸ்தானம் மலை உச்சியில் உள்ள கல்தூண் எனக் கூறப்படும் தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்பட தமிழக அரசே காரணம். தீபத் தூண் விவகாரத்தில் அரசு, அரசியல் காரணங்களோடு செயல்பட்டுள்ளது. தீபத் தூண் தேவஸ்தான இடத்திலேயே உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண்தான்.

    எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். மேல் முறையீடு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. தனி நீதிபதி உத்தரவுப்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.

    ஆனால், தீபத் தூணில் தனிநபர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும்.

    தனி நபர்கள், அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் யாரும் அங்கு தீபம் ஏற்றச் செல்ல கூடாது. தேவஸ்தானம் மட்டுமே செல்ல வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையிலும் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்திரவில் கூறியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.
    Next Article திடீர் உடல்நலக்குறைவு!. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    June 3, 2026

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    பழங்குடியின குழந்தைகளுக்கு மேஜையில் மிட்டாய் வீசிய விவகாரம்!. பாஜக எம்.எல்.ஏ முரளிதரனுக்கு கண்டனம்!

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.