Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணியை நீக்கியது செல்லாது – வழக்கறிஞர் பாலு பதிலடி
    அரசியல்

    அன்புமணியை நீக்கியது செல்லாது – வழக்கறிஞர் பாலு பதிலடி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk balu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக விதியின் படியும், கட்சி சட்டத்தின் படியும், கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு மட்டுமே உள்ளது என பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியதாக வெளியானத அறிவிப்புக்கு அன்புமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காததால் அவரை பாமக கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது, அவரின் இந்த அறிவிப்பு பாமக கட்சியை கட்டுப்படுத்தாது.

    அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது, அதில் விருப்பமும் கிடையாது, நாட்டமும் கிடையாது. அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது. பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழுப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது.  தேர்தல் ஆணையம் கடிதத்தை உரிய நேரத்தில் வெளியிட உள்ளோம்.

    பாமக விதியின்படியும், கட்சி சட்டத்தின் படியும் கட்சி நிர்வாக பணிகளை கட்சி பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கவில்லை எனவும், நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.  இன்றைக்கு மருத்துவர் அய்யா வெளியிட்ட அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அவரின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது அன்புமணி தொடர்ந்து தலைவராக வருகிறார்.

    ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரக் கூடிய வேளையில் கட்சியின் அமைப்பு தேர்தலை நடந்த கூடிய சூழல் இல்லை எனவும் எனவே கட்சித் தலைவர் செயலாளர் பொருளாளர் 3 பேரின் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமனத்தோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேர்தல் ஆணையத்திற்கும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை தெரிவித்தோம். எங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து பாமகவின் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவி காலத்தை பொது குழுவின் தீர்மானத்தின் படி 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என கூறினார்.

    பாமகவின் தலைவராக அன்புமணி அவர்களும் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். மருத்துவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கட்சி விதிகளின்படி தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவு அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல என தெரிவித்தார்.

    பாமக கட்சியை மருத்துவர் அய்யாவின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது எனவும், ராமதாஸின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு  தெரிவித்துள்ளார்.

    anbumani anbumani balu Anbumani Ramadoss PMK ramadoss
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலை சொன்ன குட்டிக்கதை…
    Next Article அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை… பொது மேடையில் நடந்த விபரீதம்… யார் இந்த சார்லி கிர்க்…
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.