Close Menu
    What's Hot

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக…. எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்
    அரசியல்

    மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக…. எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025Updated:November 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

    இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது. இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது.

    கோவை​யில் சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​யில் நீண்ட நாட்​களாக அதி​க​மாக மது விற்​பனை நடை​பெற்று உள்​ளது. காவல்​துறை சுட்​டுப் பிடித்​தோம் என்​கி​றார்​கள். இதற்கு நாம் அனை​வ​ரும் தலை​குனிய வேண்​டும். ஒரு பாது​காப்​பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்​டிருக்​கி​றோமோ என்ற நடுக்​கம் ஏற்​படு​கிறது. கடும் சட்​டங்​கள் இருந்​தால் தான் இது போன்ற சம்​பவங்​களை தடுத்து நிறுத்த முடி​யும். பொள்​ளாச்​சி​யில், அண்ணா பல்​கலை​யில் என இது​போன்று பாலியல் வன்​புணர்​வு​கள் தொடர்ச்​சி​யாக நடக்​கிறது.அதி​முக குறித்து நான் சொன்​னது விமர்​சனமல்ல உண்​மை​யைச் சொன்​னேன். அதி​முக-​வினர் பேசுவதையெல்​லாம் ஒரு பொது மனித​னாகப் பாருங்​கள். துரோகம், சமூக நீதி, சுயமரி​யாதை குறித்​தெல்​லாம் பேச இவர்​களில் யாருக்​காவது தகுதி இருக்​கிற​தா? நான்​தான் திரா​விடத்​தின் உண்​மை​யான வாரிசு என்று சொல்​லும் போது வெறி வருமா வரா​தா? அதனால்​தான் பேசினேன்.

    ஆரி​யத்தை எதிர்க்க வந்​தது திரா​விடம் என்​கி​றார்​கள். தமி​ழர் என்று வைத்​தால் பிராமணர்​கள் ‘நானும் தமி​ழன்’ என்று உள்ளே வந்து விடு​வார்​கள் என்று பெரி​யார் தொட்​டு, வீரமணி வரை பேசி வரு​கின்​ற​னர். அதே கருத்தை தான் அதி​முக-​வினர் பேசுகி​றார்​கள். திரா​விடம் என்று இருக்​கும்​போது ஜெயலலி​தா​வின் தலை​மையை திரா​விடத் தலை​வர்​கள் எப்​படி ஏற்​றார்​கள்?

    ஆரி​யத்​தின் முன்பு திரா​விடம் மண்​டி​யிட்​டது. மண்​டி​யிட்​டால் கூட பரவா​யில்லை குப்​புற​விழுந்து கும்​பிட்​டது. இதில் சுயமரி​யாதை பற்றி பேசுகிறீர்​கள். இது​தான் தன்​மான​மா… தமி​ழினத்​தின் தலை நிமிர்​வா… சுயமரி​யாதை இது​தா​னா? காளி​முத்​து, திரு​நாவுக்​கரசர் ஆகிய இரு​வரைத் தாண்டி யாரேனும் ஒரு​வர் ஜெயலலிதா முன்​பாக நிமிர்ந்து நின்று பேசி இருக்​கி​றார்​களா? திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் சுயமரி​யாதை பற்றி பேச தகுதி இல்​லை.

    எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் பாஜக தேவையற்ற வேலை​யைச் செய்​கிறது. மக்​களை பதற்​ற​மாகவே வைத்​திருக்​கப் பார்க்​கி​றார்​கள். அப்​போது​தான் செய்​கிற தவறு வெளியே தெரி​யாமல் இருக்​கும். ஆவணங்​கள் கொடுக்​க​வில்லை என்​றால் பெயர்​களை நீக்​கு​வோம் என தேர்​தல் ஆணை​யம் இப்​போது தெரிவிக்​கிறது.

    இரண்டு மாதத்​தில் தேர்​தலை வைத்​துக் கொண்டு என்ன ஆவணங்​களை கொடுக்க முடி​யும்? பிஹார் போன்ற வட மாநிலங்​களில் இருந்து தமி​ழ​கம் வந்​தவர்​களுக்கு வாக்​குரிமை வழங்க இந்த வேலை​யைச் செய்​கி​றார்​கள். அப்​படி வழங்​கும் போது தமிழ்​நாடு மற்​றுமொரு பிஹா​ராக மாறி​விடும்… என்றார்​.

    seeman#bjp#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை… தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
    Next Article ‘உனக்காக மனைவியை கொன்றேன்’: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்
    Editor TN Talks

    Related Posts

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    February 25, 2026

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.