Close Menu
    What's Hot

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இது தமிழ்நாடா, கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் கொலைக்கு இபிஎஸ் கண்டனம்
    அரசியல்

    இது தமிழ்நாடா, கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா..?

    இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த “ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை” என விளம்பரப்படுத்த வேண்டியது தானே முதல்வரே?

    ரோட்டிலும் கொலை, கோர்ட்டிலும் கொலை, பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இப்படி தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல்.

    இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு, தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனங்கள்.

    தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்காசியில் அரசு வழக்கறிஞர் கொலை – பட்டப்பகலில் கொடூரம்
    Next Article ரூ.4,000 கோடி என்ன ஆச்சு? ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    June 3, 2026

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    June 3, 2026

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.