தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதா கலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ஆர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு கொடுத்த அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன், “சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் அவற்றை கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் குடியரசு தலைவருக்கு அந்த சட்ட மசோதாக்களை பரிந்துரை செய்த விஷயம் சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் மறு நிறைவேற்றும் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும் குடியரசுத் தலைவர் மூன்று மாதத்திலும் முடிவு எடுத்தாக வேண்டும்”, என்ற காலக்கெடுவையும் நிர்ணயத்தினர்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 13ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 143ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு 14 எதிர் கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
குடியரசுத் தலைவர் எழுப்பிய இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் முடிவாக இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்தத் தீர்ப்பில், “ மாநில சட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு எந்தவித காலக்கெடுவையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. ஒருவேளை ஆளுநர் சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் வைத்திருந்தால், அது சம்பந்தமாக மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழக அரசு தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர் மீதும் குடியரசு தலைவர் மீதும் காலக்கெடு விதித்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
சட்ட மசோதாக்களை ஆளுநர் காரணமே இல்லாமல் கிடப்பில் வைத்திருந்தால், அது சம்பந்தமாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்பலாம். இருப்பினும் அவ்வாறு ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக எந்தவித உத்தரவையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மாநில சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒன்று நிறைவேற்ற வேண்டும் இல்லை நிராகரிக்க வேண்டும். மூன்றாவதாக திரும்ப மாநில அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அதேசமயம் மசோதாவை கால வரமின்றி கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக வழி நடத்தி செல்லக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை ஏற்க முடியாது”, இவ்வாறு குடியரசு தலைவர் எழுப்பிய அந்த கடிதத்திற்கு உச்ச நீதிமன்றம் சார்பில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
