Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை
    அரசியல்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025Updated:September 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை..
    மத்திய அரசின் அறிவிப்புக்கு செல்வபெருந்தகை கண்டனம்

    டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு..

    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த உத்தரவு, மாநிலங்களின் உரிமையையும், மக்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயல் ஆகும். எந்தவொரு சுரங்கத் திட்டமும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்முன், பொதுமக்களின் கருத்தை கேட்பது அரசின் முக்கிய கடமையாகும்.

    முன்னர் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டமும், கன்னியாகுமரி கிள்ளியூரில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டமும் மக்களின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டன. இது போன்ற அனுபவங்களிலிருந்தே ஒன்றிய அரசு இப்போது மக்களிடமிருந்து கருத்து கேட்கும் உரிமையையே பறித்து விட முயல்கிறது. சாமான்ய மக்களின் நலனைவிட, பெருமுதலாளிகள், பெருந்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

    அணுக்கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய், சிறுநீரக நோய், கருச்சிதைவு, தோல் நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அணுக்கனிமச் சுரங்கங்களை மக்கள் விருப்பமின்றி அமைப்பது அப்பகுதி மக்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலாகும். அதேபோல், பிற கனிமச் சுரங்கங்கள் விவசாயம், குடிநீர், வேலைவாய்ப்பு, இயற்கை சூழல் ஆகியவற்றை சீரழிக்கும்.

    எனவே, மக்களிடமிருந்து கருத்து கேட்காமல் சுரங்க அனுமதி வழங்கும் ஒன்றிய அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் உரிமைகளையும், மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

    மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த சுரங்கத் திட்டங்களும் மக்களின் கருத்துக் கேட்காமல் அமல்படுத்தப்படக் கூடாது. மக்களின் உயிரையும், இயற்கையையும் காக்கும் பொறுப்பே அரசின் முதன்மை கடமை. அதனை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மீண்டும் ஒருமுறை கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவில் இருந்து நீக்கியதும் அன்புமணி வெளியிட்ட அறிக்கை
    Next Article இமானுவேல் சேகரன் குருபூஜை – வழக்கு முடித்து வைப்பு
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.