Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாமகவில் இருந்து நீக்கியதும் அன்புமணி வெளியிட்ட அறிக்கை
    அரசியல்

    பாமகவில் இருந்து நீக்கியதும் அன்புமணி வெளியிட்ட அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவில் இருந்து நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத நிலையில் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிபப்டை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த சூழலில் பாமக தலைவர் பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அண்மையில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் பங்கேற்று இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகங்களை சுட்டிக்காட்டிய பிறகு அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் தான்.

    மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின்படி டங்ஸ்டன் சுரங்கம், கிள்ளியூர் அணுக்கனிம சுரங்கம் ஆகியவற்றை மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்து விட முடியும். அணுக்கனிம சுரங்கங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை அணுக்கதிர்வீச்சு ஆபத்துக்கும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், பிற சுரங்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதை செய்யக்கூடாது.

    எனவே, அணுக்கனிமங்கள் மற்றும் முக்கியக் கனிம சுரங்கங்களை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை; இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    Anbumani Ramadoss anbumani statement elaction 2026 PMK ramadoss
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்புமணியை தனி கட்சி ஆரம்பிக்க சொன்ன ராமதாஸ்
    Next Article தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.