திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி  காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிப்பதாக அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும்,  சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின்  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 திமுக ஆட்சியில் தான்  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான்  ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த  சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின்  பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version