Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»புதுச்சேரி தவெக பொதுக்கூட்டம்: மேடை, இருக்கைகள் இல்லை – க்யூ ஆர் கோடு இருந்தால்தான் அனுமதி!
    அரசியல்

    புதுச்சேரி தவெக பொதுக்கூட்டம்: மேடை, இருக்கைகள் இல்லை – க்யூ ஆர் கோடு இருந்தால்தான் அனுமதி!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் சம்பவத்தையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை நாளை மறுநாள் (டிச.9) விஜய் சந்திக்கிறார். பிரச்சார வாகனத்தில் நின்று பேசவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மேடையும் இல்லை, தொண்டர்களுக்கு இருக்கையும் இல்லை, க்யூ ஆர் கோடு நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    3வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விஜய் சுற்றுப்பயணம் தடைபட்டது.

    புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், உப்பளம் துறைமுக வளாகத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விஜய் பேசுகிறார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அவர் மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

    வழக்கமாக பொதுக்கூட்டங்களில் மேடை, தொண்டர்களுக்கு இருக்கை அமைக்கப்படும். ஆனால் புதுவை உப்பளம் துறைமுக வளாக திடலில் தண்ணீரை வெளியேற்றி, மண்ணை கொட்டி சீரமைத்துள்ளனர். தொண்டர்கள் வந்து செல்ல கூடுதலாக துறைமுக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தவெக முக்கிய நிர்வாகிகளிடம் விஜய் புதுச்சேரி வருகை தொடர்பாக விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

    துறைமுக வளாகத்தில் தவெக தலைவர் விஜய்க்கு மேடை இல்லை, தொண்டர்களுக்கு இருக்கை அமைக்கப்படவில்லை. பிரச்சார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேசுகிறார். கூட்டத்தில், தமிழகத்தின் வெளிமாவட்டங்களில் இருந்து தவெக தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    இதனால் புதுவை தவெக பொதுக்கூட்டத்துக்கு 5 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க தவெக திட்டமிட்டுள்ளது. இதற்காக கியூ ஆர் கோடுடன் நுழைவுச்சீட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சீட்டு புதுவை, காரைக்காலில் உள்ள தவெகவை சேர்ந்த தொகுதி, கிளை கழகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. க்யூஆர் கோடு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே துறைமுக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    திங்கள்கிழமை இரவு விஜய் பிரச்சார வாகனம் புதுவைக்கு வருகிறது. விஜய் கார் மூலம் செவ்வாய் காலை 11 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வருவார் எனத் தெரிகிறது. பொதுக்கூட்டத்துக்கு 10.30 முதல் 12.30 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் சுமார் 12 மணியளவில் பேசுவார் என்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆன்மீகத்திற்கு திமுக அரசு எதிரியில்லை… மு.க.ஸ்டாலின் பேச்சு
    Next Article சனாதனத்தை திமுக அரசு எதிர்ப்பது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.