Close Menu
    What's Hot

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    விஜய் பேச்சு சர்ச்சை எதிரொலி..!! முன்ஜாமீன் மறுப்பை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!!

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் தை பூச விழாவில் பங்கேற்பாரா? – வானதி சீனிவாசன் நச் கேள்வி
    அரசியல்

    கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் தை பூச விழாவில் பங்கேற்பாரா? – வானதி சீனிவாசன் நச் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vanathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் டிச. 20–ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எந்த மதங்கள் சார்ந்தும், எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள்’ என கூறியுள்ளார்.

    மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பது தான் கடந்த கால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட கூறுவதில்லை. இது குறித்து சட்டப்பேரவையில் பேச முயன்றால், சபாநாயகர் அப்பாவு அனுமதிப்பதில்லை. இந்நடவடிக்கை மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா? வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தயாரா?

    இந்து கோயில்களுக்கு திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில் தான் திருப்பணிகள் நடக்கின்றன.

    திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசு தான். கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளை பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலத்தில் சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம்… ராமதாஸ் அழைப்பு
    Next Article ரயில் டிக்கெட் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு… பயணிகள் அதிர்ச்சி
    Editor TN Talks

    Related Posts

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    கட்சியை எப்படியாவது காப்பாத்தணும்…!! களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! முக்கிய ஆலோசனை..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    விஜய் பேச்சு சர்ச்சை எதிரொலி..!! முன்ஜாமீன் மறுப்பை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!!

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.