ஆஷஸ் கிரிக்​கெட் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது

இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளி​லும் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​விட்​டது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 4-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி புகழ்​பெற்ற மெல்​பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நாளுக்கு அடுத்த நாள் இப்​போட்டி தொடங்​கு​வ​தால் பாக்​ஸிங் டே டெஸ்ட் போட்​டி​யாக இது அமை​கிறது.

எனவே, ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர், மார்னஸ் லாபஸ்சென் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஜோஷ் டங், அட்கின்சன், பிரைடன் கார்ஸின் ஆகியோரின் அபார பந்துவீச்சில் ஆஸி வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக அந்த அணி, 45.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஷ் டங் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version