Close Menu
    What's Hot

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
    விளையாட்டு

    ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ashhes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்​திரேலியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்​தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்​கு​கிறது.

    பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க இந்த ஆஷஸ் தொடர் 74-வது முறை​யாக நடை​பெறுகிறது. கடைசி​யாக ஆஸ்​திரேலிய மண்​ணில் இங்​கிலாந்து அணி கடந்த 2010-2011-ம் ஆண்டு நடை​பெற்ற ஆஷஸ் தொடரை 3-1 என வென்​றது.

    அதன் பின்​னர் ஆஸ்​திரேலிய மண்​ணில் நடை​பெற்ற 3 தொடர்​களை​யும் இங்​கிலாந்து அணி இழந்​தது. இதில் 13 போட்​டிகளில் தோல்​வியை​யும், 2 ஆட்​டத்தை டிரா​வும் செய்​திருந்​தது இங்​கிலாந்து அணி. எனினும் இம்​முறை வயதான வீரர்​கள், பலவீன​மான பந்து வீச்​சுடன் காணப்​படும் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக இங்​கிலாந்து வீரர்​கள் ஆதிக்​கம் செலுத்த முயற்​சிக்​கக்​கூடும்.

    பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர், மார்க் அவுட், கஸ் அட்​கின்​சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஆஸ்​திரேலிய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். பேட்​டிங்​கில் ஜாக் கிராலி, பென் டக்​கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்​ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

    ஆஸ்​திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி​யில் பிர​தான வேகப்​பந்து வீச்​சாளர்​களான கேப்​டன் பாட் கம்​மின்​ஸ், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் காயம் காரண​மாக விளை​யாட​வில்​லை. இதனால் மிட்​செல் ஸ்டார்க், நேதன் லயன் ஆகியோரை நம்​பியே பந்​து​வீச்சு திட்​டங்​கள் அமையக்​கூடும். முதல் டெஸ்ட் போட்​டிக்​கான விளை​யாடும் லெவனை ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது.

    இதில் தொடக்க பேட்​ஸ்​மேன் ஜாக் வெத​ரால்ட், வேகப்​பந்து வீச்​சாளர் பிரெண்​டன் டாகெட் ஆகியோர் அறி​முக வீரர்​களாக இடம் பெற்​றுள்​ளனர். ஆல்​ர​வுண்​டராக கேமரூன் கிரீன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

    பேட்​டிங்​கில் கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித், உஸ்​மான் கவாஜா, மார்​னஸ் லபுஷேன் ஆகியோர் தங்​களது அனுபவத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோ​ரும் கைகொடுக்​கும் பட்​சத்​தில் அணி கூடு​தல் பலம் பெறும்.

    அணி​கள் விவரம் – ஆஸ்​திரேலி​யா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்​டன்), ஜாக் வெத​ரால்ட், உஸ்​மான் கவாஜா, மார்​னஸ் லபுஷேன், டிரா​விஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்​செல் ஸ்டார்க், நேதன் லயன், பிரெண்​டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

    இங்​கிலாந்​து: பென் ஸ்டோக்ஸ் (கேப்​டன்), ஜாக் கிராலி, பென் டக்​கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஷோயப் பஷீர், பிரைடன் கார்​ஸ், கஸ் அட்​கின்​சன், ஜோஃப்ரா ஆர்ச்​சர், மார்க் வுட்.

    2 பூர்​வக்குடி வீரர்​கள்: பெர்த்​தில் இன்று தொடங்க உள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்​டிக்​கான ஆஸ்​திரேலிய அணி​யில் அந்​நாட்​டின் பூர்​வக்​குடியை சேர்ந்த ஸ்காட் போலண்ட், பிரெண்​டன் டாகெட் ஆகிய 2 வீரர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். ஆஸ்​திரேலிய டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் ஒரே போட்​டி​யில்​ பூர்​வகுடியை சேர்ந்​த இரு​வர்​ விளை​யாடு​வது இது​வே முதன்​முறை.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
    Next Article திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது
    Editor TN Talks

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    July 5, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.