Close Menu
    What's Hot

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
    இந்தியா

    பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்  பிஹாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர்  பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார்.

    பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பிஹாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.

    பிஹார் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும், ஏன் ஒரு புதிய அமைப்பு வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு விளக்கத் தவறிவிட்டேன். எனவே, அதற்குப் பிராயச்சித்தமாக, நவம்பர் 20 ஆம் தேதி காந்தி பிதிஹர்வா ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் அனுசரிப்பேன். நாங்கள் தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை” என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Next Article ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.