Close Menu
    What's Hot

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    இந்தியா

    ஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (நவ. 21) முதல் வரும் 23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    இதற்காக இன்று (நவ. 21) காலை டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக தனது x தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு, மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சி மாநாடு என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜி 20 உச்சிமாநாட்டில் நடைபெறும் முக்கிய 3 அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதில், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து பிரதமர் முக்கிய உரையாற்ற உள்ளார். மேலும், இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாட்டுத் தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து, ஜ 20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்
    Next Article பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
    Editor TN Talks

    Related Posts

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    May 19, 2026

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.