இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்றைய முன்தினம் ( நவம்பர் 21 2025 ) தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டு நாட்களுக்குள் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை :
• நாள் 1: 51,531
• நாள் 2: 49,983
மொத்தம்: 101,514 | ஒரு நாளைக்கு சராசரி: 50,757
முதல் இரண்டு நாட்களில் என்றும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மூன்றாவது நாளுக்கான டிக்கெட் விற்பனை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று போட்டி முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய வீரர் ஹெட் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்கூட்டயே டிக்கெட் வாங்கிய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதும் கூடுதல் தகவல்.
போட்டி நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நடந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த மைதானத்தில் கிடைக்க வேண்டிய 17.35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்காமல் போனது.
கடந்த மாதம் கூட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், “2024–25 நிதியாண்டில் நிகர பற்றாக்குறை $11.34 மில்லியனாக ( இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் ) இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது முதல் டெஸ்ட் போட்டி விரைவாக நடந்து முடிந்ததால் சுமார் 17.35 கோடி ரூபாயை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
