கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ’சாரா எர்ரானி – ஆண்ட்ரியா வவசோரி’ கூட்டணி 4-6, 6-3 (10-4) என்ற செட் கணக்கில் கேப்ரியலா டாப்ரோஸ்கி ( கனடா ) – இவான் கிங் (அமெரிக்கா) இணையை தோற்கடித்து பட்டத்தை தக்கவைத்தது.
அவர்களுக்கு ரூ.1.35 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மூத்த வீராங்கனை சாரா எர்ரானி கிராண்ட்ஸ்லாமில் வென்ற 10-வது இரட்டையர் பட்டம் இதுவாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
